தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.நேற்று இரவு கனமழை பெய்த நிலையில்
நாகப்பட்டினத்தில் 52 மில்லி மீட்டரும், நாகப்பட்டினம்,வேளாங்கண்ணியில் 9 மில்லி மீட்டரும்,திருக்குவளையில் 14 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி இருந்தது இந்த நிலையில் நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் வேளாங்கண்ணி, நாகூர், சிக்கல், திட்டச்சேரி, கீழ்வேளூர், தேவூர், திருக்குவளை, எட்டுக்குடி, பூவைத்தேடி, திருப்பூண்டி விழுந்தமாவடி உள்ளிட்ட இடங்களில் காலை முதல் மிதமான மழைபெய்து வருகிறது இதனால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது மேலும் சம்பா சாகுபடி பணிகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு இந்த மழை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.