நாகப்பட்டினம்:
திருக்குவளை தாலுகாவிற்கு தனி நீதிமன்றம் மற்றும் நாகையில் கூடுதல் மகளிர் நீதிமன்றம் உள்ளிட்ட நான்கு கட்டிடங்களை, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதி அரசர் டி.ராஜா திறந்து வைத்தார்.
திருக்குவளை தாலுகாவில் உள்ள வழக்குகளை விரைவாக தீர்ப்பதற்காக நாகப்பட்டினத்தில் இன்று மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நீதிமன்றம் திறக்கப்பட்டது. இதனை சென்னை உயர்நீதிமன்ற நீதி அரசர் டி.ராஜா திறந்து வைத்தார் அதனைத் தொடர்ந்து நாகையில், கூடுதல் மகளிர் நீதிமன்றம், மகளிர் விரைவு நீதிமன்றம் மற்றும் குடும்ப நல நீதிமன்றங்களுக்கான புதிய கட்டிடத்தையும் அவர் திறந்து வைத்தார் அதனை தொடர்ந்து
திருக்குவளை தாலுகா நீதிமன்றத்திற்காக, மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் ராஜ்கணேஷ் நியமிக்கப்பட்டார். பின்னர் நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள பண்டையகால சூடாமணி விஹாகரத்தில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகளை பார்வையிட்ட நீதி அரசர் டி ராஜா நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகளையும் நட்டு வைத்தார். புதிய நீதிமன்ற கட்டிடங்கள் திறப்பு விழாவில், தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், நாகை சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் மற்றும் நீதிபதிகள், வழக்கறிஞர் இதில் கலந்து கொண்டனர்.