நாகப்பட்டினத்தில் உள்ள இ ஜி எஸ் பிள்ளை தனியார் கல்லூரியின் கல்வி குழும தலைவர் ஜோதிமணிஅம்மா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அக்கல்லூரியில் இன்று போதைப் பொருள் தீமை பற்றிய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங் துவக்கி வைத்தார் . பேரணியில் கல்லூரி மாணவ மாணவிகள் 2000 க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து
பேரணியானது முக்கிய வீதிகள் வழியாக நகராட்சி அலுவலகம் வரை சென்றடைந்தது . அப்போது கல்லூரி மாணவ, மாணவிகள் புகையிலை மற்றும் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பதாகைகளை கைகளில்
ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர். அதனைத் தொடர்ந்து கல்வி குழும தலைவரின் பிறந்த நாளை முன்னிட்டு, நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, தேவையான வீல் சேர், ஸ்ட்ரெச்சர் போர்வை உள்ளிட்ட மூன்று லட்சம் ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் முன்னிலையில் மருத்துவர்களிடம் வழங்கப்பட்டன.