நாகை மாவட்டம் திட்டச்சேரியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு விழா நடைபெற்றது. 2.கோடி 73,லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம் தாலுக்காவில் புதிதாக கட்டப்பட்ட 7, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை, தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியம் மருத்துவ நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,
நாகை மாவட்டம் ஒரத்தூரில் கட்டப்பட்ட மருத்துவக் கல்லூரி என்பது அதிமுக ஆட்சியில் தேர்வு செய்யப்பட்ட மிக மோசமான இடம் என்றும், பொட்டல் காட்டில் கட்டப்பட்ட இடம் என்பதால் தண்ணீர் இல்லாமல் உடனடியாக அதனை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றார். ஒன்றுக்கும் உதவாத தனது சொந்த நிலத்தை நல்ல விலைக்கு விற்பனை செய்வதற்காக முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன் அங்கு மருத்துவக் கல்லூரி இடம் தேர்வு செய்ததாக விமர்சித்த மா.சு, இந்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். மேலும் அதிமுக ஆட்சியின் போது
நாகையில் தகுதியற்ற இடத்தில் மருத்துவக் கல்லூரி கட்டி, மக்களின் நிதி விரயம் செய்யப்பட்டுள்ளதால், சம்பந்தப்பட்ட முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது சட்ட மேல் நடவடிக்கை தொடரும் என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து கூறிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சு, மதுரை மாநாடு என்பது நியாயத்திற்காக நடத்தும் மாநாடு அல்ல என்றும், திமுக நடத்தும் நீட் தேர்விற்கான உண்ணாவிரதத்தை கண்டு அதிமுகவிற்கு பயம் ஏற்பட்டுள்ளது என்றும் விமர்சித்தார்.