Skip to content
Home » நாகை கலெக்டர் ஆபிசில் 2 மகன்களுடன் தற்கொலைக்கு முயன்ற தாய்… பரபரப்பு

நாகை கலெக்டர் ஆபிசில் 2 மகன்களுடன் தற்கொலைக்கு முயன்ற தாய்… பரபரப்பு

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அடுத்துள்ள ஆதனூர் கிராமத்தை சேர்ந்தவர் வாலம்பாள். கணவர் சிவராஜ் மற்றும் பள்ளி செல்லும் இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் மின்சார வசதி கிடைக்காததால் கடந்த 3 ஆண்டுகளாக அவதிப்பட்டு வரும் வாலம்பாள், தெருவிளக்கு கூட இல்லாததால், கடும் அவதியை சந்தித்து வருகிறார். இருளில் வாழ்ந்து வரும் அவர்கள் குழந்தைகள் படிக்க முடியாமலும், இரவு நேரங்களில் விஷ ஜந்துக்களின் அச்சுறுத்தலுக்கு ஆளாகி அவதியடைந்து வருகின்றனர். ஆதனூர் ஊராட்சி மன்ற தலைவர் சந்திராசுப்ரமணியன், வேதாரண்யம் வட்டாட்சியர், நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என பல்வேறு இடங்களில் நூற்றுக்கணக்கான மனுக்கள் கொடுத்தும் அவைகள் அனைத்தும் குப்பையில் வீசப்பட்டதாக வாலம்பாள் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், இன்று நான்காவது முறையாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு குழந்தைகளுடன் வந்த அவர், தனது கைப்பையில் மறைத்து வைத்திருந்த வயலுக்கு தெளிக்கும் பால்டாயின் விஷ பாட்டிலை குடித்து தற்கொலைக்கு முயன்றார். பின்னர் அங்கு வந்த போலீசார் விஷ பாட்டிலை அப்புறப்படுத்தினர். அருகாமையில் வசிப்பவர் போல பட்டா உள்ளிட்ட அனைத்து ஆவணமும்

தன்னிடம் இருந்தும் மின்சாரத்தை அதிகாரிகள் மின்கம்பம் நட்டு மின்சார இணைப்பு தர மறுப்பதாக வேதனை தெரிவித்துள்ள வாலம்பாள், வாழ்ந்தால் மற்றவர்கள் போல அனைத்து வசதியுடன் சமமாக வாழ வேண்டும் இல்லையென்றால் தற்கொலை செய்துகொண்டு சாகவேண்டும் என்று கண்ணீருடன் கூறியுள்ளார். மின்சார வசதி கிடைக்காததால் தனது குழந்தைகளுடன் இன்று நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தாய் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!