நாகை மாவட்டம், நாகூர் அடுத்துள்ள பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் இன்று புதிய வழித்தடத்திலான அரசு பேருந்து இயக்கப்பட்டது. மீனவ மகளிர்காக இலவசமாக துவங்கப்பட்டுள்ள அரசுப்பேருந்து பட்டினச்சேரி முதல் நாகப்பட்டினம் நகர் பகுதி வரை இயக்கப்படுகிறது. இன்று துவங்கப்பட்ட புதிய வழித்தடத்திற்கான பேருந்தினை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக
தலைவர் கௌதமன் ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர். இதைப்போல் நாகை மாவட்டம் பாலையூர் கிராமத்திலும் விவசாய பெண்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் மகளிருக்கான இலவச பேருந்து இயக்கப்பட்டது. இதனையும் மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் எம் எல் ஏ ஆளூர் ஷாநவாஸ் உள்ளிட்டோர் ஆரத்தி எடுத்து மலர் தூவி, துவக்கி வைத்தனர். நாகூர் பட்டினச்சேரி மற்றும் பாலையூர் கிராமங்களில் புதிய வழித்தடத்தில் பேருந்துகள் இயக்கப்பட்டதால், அப்பகுதி மீனவ மகளிர் மற்றும் விவசாய பெண்களும், பள்ளி மாணவர்களும் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.