நாகப்பட்டினம்:
மாநில உரிமை பறிப்பு, கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக செயல்படும் ஒன்றிய பாஜக அரசையும், ஆளுநர்களையும் கண்டித்து நாகை அவுரி திடலில் இந்தியா கூட்டணி கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
மாநில உரிமை பறிப்பு, கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக செயல்படும் ஒன்றிய பாஜக அரசையும், ஆளுநர்களையும் கண்டித்து நாகை அவுரி திடலில் இந்தியா கூட்டணி கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், திமுக, சிபிஐ, விசிக, திக, மமக, உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் இந்தியாவில் தென் மாநிலங்களின் உரிமையை பறித்து செயல்படும் ஒன்றிய அரசை கண்டித்தும், மாநில நலனுக்கு எதிராக செயல்படும் ஆளுநர்களை திரும்ப பெற வலியுறுத்தியும், கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக செயல்படும் பாஜக அரசுக்கு எதிராகவும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.