புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து டீசல் கடத்தப்படுவதாக எஸ்பி ஹர்ஷ்சிங் தகவல் வந்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் தனிப்படை பிரிவு சப் இன்ஸ்பெக்டர் அக்பர் அலி தலைமையில் போலீசார் நாகூர் அருகே வெட்டாறு பாலம் அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது காரைக்காலில் இருந்து நாகப்பட்டினம் நோக்கி வந்த மினி லோடு வேனை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து நாகப்பட்டினத்திற்கு 600 லிட்டர் டீசல் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து
தனிப்படை போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். இதில் சென்னையை சேர்ந்த ராமன், நாகூரைச் சேர்ந்த ராமச்சந்திரன்,பூதங்குடி சேர்ந்த ஐயப்பன் என்பது தெரியவந்தது. இது குறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து செய்தனர். மேலும் அவரிடம் 600 லிட்டர் டீசல் மற்றும் மினி வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.இதுபோல தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்திலிருந்து நாகப்பட்டினத்திற்கு டீசல் கடத்தப்படுவதால் இங்குள்ள பெட்ரோல் பங்குகளுக்க உரிய விற்பனை இல்லை என பெட்ரோல் பங்கு உரிமையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்