தமிழ்நாட்டில் தூத்துக்குடிக்கு அடுத்தபடியாக வேதாரண்யம் பகுதியில் உப்பு உற்பத்தி அதிகளவில் செய்யப்படுகிறது. உற்பத்தி செய்யப்பட்ட உப்புகளை வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. மழைக்காலம் முடிந்து இந்த ஆண்டிற்கான உப்பு உற்பத்தி செய்வதற்கு ஜனவரி மாதத்தில் உப்பல பாத்திகளை சீர் செய்து உப்பு உற்பத்தியை உப்பல தொழிலாளர்கள் ஆரம்பித்து உற்பத்தியை தொடங்கினர். ஆனால் கடந்த ஐந்து தினங்களாக பெய்த கனமழையால் தயார் செய்யப்பட்ட உப்பல பாத்திகள் மழை நீர்மூழ்கி உற்பத்ததி முற்றிலும் தடைபட்டு உள்ளது. உப்பல தொழிலாளர்கள் சுமார் 10,000 மேற்பட்டோர் வேலை இல்லாமல் வீடுகளில் முடங்கிப் போய் உள்ளனர் பெரிதும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதுபோல் மீண்டும் உப்பு உற்பத்தி தொடங்குவதற்கு ஏக்கருக்கு 30,000 செலவு செய்ய வேண்டும் எனவும் உற்பத்தியாளர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர் ஆகவே மத்திய மாநில அரசுகள் தலையிட்டு பாதிக்கப்பட்ட உரிமையாளருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என மாநில அரசுக்கு உப்பு உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
தொடர் மழை.. நாகையில் உப்பு உற்பத்தி பாதிப்பு..10, 000 பேருக்கு வேலையில்லை..
- by Authour
