நாட்டின் வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 மாநிலங்களில் உள்ள சட்டசபைகளுக்கு கடந்த ஜனவரி மாதம் 18-ந் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. திரிபுராவில் உள்ள 60 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த மாதம் 16-ந் தேதி தேர்தல் நடந்தது. அங்கு 90 சதவீத வாக்குகள் பதிவாகின. அதே போன்று தலா 60 இடங்களைக் கொண்ட மேகாலயா, நாகாலாந்து மாநில சட்டசபைகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 27-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.
மேகாலயாவில் முதல்-மந்திரி கான்ராட் சங்மா(முன்னாள் பாராளுமன்ற சபாநாயகர் சங்மா மகன்) தலைமையில் என்.பி.பி. என்னும் தேசிய மக்கள் கட்சி ஆட்சி நடக்கிறது. அங்கு எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டசபை ஏற்படும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் கூறின. மேகலாயாவில் தற்போதைய நிலவரப்படி ஆளும் தேசிய மக்கள் கட்சி 19 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 9 இடங்களிலும் பாஜக 7 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 7 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
திரிபுராவில் பாஜக32 இடங்களிலும் கம்யூனிஸ்ட் கூட்டணி16இடங்களிலும், திப்ரா மொய்தா கட்சி 12 இடங்களிலும் முன்னணியில் உள்ளது. திரிபுராவில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கிறது.
நாகாலாந்தில் பாஜக கூட்டணி 37 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களிலும் என்பிஎப் கட்சி 3 இடங்களிலும் முன்னணியில் உள்ளது.