Skip to content

போலீஸ் நிலையம் முன் பெண் தற்கொலை- இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

  • by Authour

தஞ்சை மாவட்டம் நடுக்காவேரியில் அடிதடி வழக்கில் தினேஷ் என்பவரை நடுக்காவேரி போலீசார்  கைது செய்தனர்.  இதனை கண்டித்து தினேசின் தங்ககைள் கீர்த்திகா(29), மேனகா (31)  ஆகியோர்  போலீஸ் நிலையம் முன்  விஷம் குடித்தனர். இதில்  கீர்த்திகா  இறந்தார். மேனகா  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே தினேசை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை  சிறையில் அடைத்தனர். கீர்த்திகா இறந்ததையொட்டி  தினேசை  பரோலில் எடுத்து உள்ளனர். அவர் தற்போது  தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனை போலீசில்  வைக்கப்பட்டு உள்ளார்.

போலீஸ் நிலையம் முன் சகோதரிகள் விஷம் குடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து தஞ்சை எஸ்.பி. விசாரணை நடத்தினார்.

இதைத்தொடர்ந்து நடுக்காவேரி போலீஸ்  இன்ஸ்பெக்டர் ஷர்மிளா காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

இதற்கிடையே  கீர்த்திகாவின் உடல் பிரேத பரிசோதனை  மருத்துவகல்லூரி மருத்துவமனையில் இன்று நடந்தது. இதையொட்டி  மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தஞ்சாவூர் டவுன், வல்லம், திருவையாறு டிஎஸ்பிக்கள் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும்  இந்த விவகாரத்தில் காவல்துறை  தரப்பில் என்ன  தவறுகள்  செயயப்பட்டது என விசாரிக்க   ஆர்டிஓ இலக்கியா விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!