Skip to content

நடுக்காவேரி : 2 எஸ்.ஐ, ஏட்டு பணியிட மாற்றம்

தஞ்சாவூர்: நடுக்காவேரியில் காவல் நிலையம் முன்பு இளம் பெண் விஷம் குடித்து உயிரிழந்த விவகாரத்தில் உதவி ஆய்வாளர்கள் மற்றும் தலைமை காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அடுத்த  நடுக்காவேரி காவல்நிலையத்தில் தினேஷ் என்பவரை காவல்துறையினர் கைது செய்ததை கண்டித்து அவரது சகோதரிகள் மேனகா மற்றும் கீர்த்திகா காவல் நிலையம் முன்பு விஷம்  குடித்தனர்.   இதில் கடந்த 9ம் தேதி கீர்த்திகா சிகிச்சை பலனின்றி இன்றி உயிரிழந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக காவல் ஆய்வாளர் ஷர்மிளா காத்திருப்போர்  பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் இந்த காவல் நிலையத்தில் பணிபுரிந்த தலைமை காவலர் மணிமேகலை மற்றும் உதவி ஆய்வாளர்கள் அறிவழகன், கலியபெருமாள் ஆகியோர் வேறு காவல் நிலையத்திற்கு  மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

error: Content is protected !!