நடிகை திவ்யா(40) மாரடைப்பு காரணமாக இன்று உயிரிழந்ததாக தகவல் வௌியானது. தமிழில் சிம்புவுடன் குத்து படத்திலும், தனுஷின் பொல்லாதவன் படத்திலும், சூர்யாவுடன் வாரணம் ஆயிரம் உள்ளிட்ட படங்களிலும் நடித்து பிரபலமானவர் நடிகை திவ்யா.
2013ல் கர்நாடகாவின் மாண்டியா தொகுதியில் நடிகை திவ்யா ஸ்பந்தனா காங்கிரஸ் எம்பியாக இருந்தவர், கர்நாடக முன்னாள் முதல்வர் கிருஷ்ணாவின் பேத்தி என்பது குறிப்பிடதக்கது.
நடிகை திவ்யா இறந்து விட்டதாக செய்திகள் வெளியான நிலையில், நடிகை திவ்யாவே இதற்கு மறுப்பு தெரிவித்து உள்ளார். அதில் நான் ஜெனிவாவில் நலமுடன் இருக்கிறேன். நான் இறந்து விட்டதாக வெளியான செய்தி வதந்தி என கூறி உள்ளார். அத்துடன் தனது புகைப்படத்தையும் வெளியிட்டு உள்ள திவ்யா நாளை தான் பெங்களூரு வர இருப்பதாகவும் கூறி உள்ளார்.