இந்திய கிரிக்கெட் அணி வீரர் தங்கராசு நடராஜன் தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியில் ‘நடராஜன் கிரிக்கெட் மைதானம்’ என்ற பெயரின் கிரிக்கெட் மைதானத்தை நிறுவியுள்ளார். இதன் தொடக்க விழா வரும் 23-ம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து நடராஜன் தனது டிவிட்டரில்…. “எனது கனவு நனவாகி உள்ளது. நடராஜன் கிரிக்கெட் மைதானத்தின் திறப்பு விழா குறித்து அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்” என தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் அசோக் சிகாமணி ஆகியோர் இந்த மைதானத்தை திறந்து வைக்க உள்ளனர் .