Skip to content

பொள்ளாச்சி அரசு பஸ் சீட்டில் அரிவாள் வைத்த மர்ம நபர்கள்…. பரபரப்பு….

  • by Authour

கோவை, பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம் பகுதியில் ஆனைமலை, கோட்டூர் சேத்துமடை,பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம் என பல பகுதிகளுக்கு அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்துகள் 50க்கும் மேற்பட்டது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இருந்து வருகிறது இப்பகுதிகளுக்கு ஏராளமான கூலித் தொழிலாளர்கள் மற்றும் தினசரி வேலைக்கு செல்பவர்கள் பயணித்து வருகின்றனர் இந்நிலையில் கோபாலபுரம் செல்லும் 5 C அரசு பேருந்தில் இரண்டு அருவாள்கள் மர்ம நபர்கள் வைத்துச் சென்றுள்ளனர் இதை பொதுமக்கள் போட்டோ எடுத்து சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணையில் கூலி வேலைக்கு செல்லும் நபர்கள் தாங்கள் அமர்ந்து செல்ல பேருந்தில் அரிவாள் வைத்துள்ளதாக கூறப்படுகிறது பொள்ளாச்சி பேருந்தில் அரசு பேருந்தில் அரிவாள் வைத்த சம்பவம் பரபரப்பாக பேசப்படுகிறது.

error: Content is protected !!