திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த அருண்குமார், இவர் ஆம்பூரில் நகைகடை நடத்தி வரும் நிலையில், நேற்று (26) இரவு அருண்குமார், ஆம்பூரில் உள்ள நகைகடையை பூட்டி விட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிய போது, சோலூர் பகுதியில் உள்ள ரயில்வே மேம்பாலத்தின் கீழ் வெளிச்சம் இல்லாத பகுதியில் அருண்குமார் சென்ற போது, மர்மநபர்கள் அருண்குமாரை வெட்டி வெட்டு தப்பியோடியுள்ளனர், உடனடியாக இதனை கண்ட அவ்வழியாக சென்ற பொதுமக்கள் அருண்குமாரை, மீட்டு சிகிச்சையிற்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், அதனை தொடர்ந்து அருண்குமாரை மருத்துவர்கள் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், அங்கு அருண்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இச்சம்பவம் குறித்து ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் நகை கடை உரிமையாளரை கத்தியால் வெட்டி விட்டு தப்பியோடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
நகைக்கடை உரிமையாளரை தாக்கிய மர்ம நபர்கள்…. படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி….
- by Authour
