கர்நாடக மாநிலம் மைசூரு அருகே கொள்ளேகால் – டி நரசிபுரா சாலையில் குருபுரு கிராமத்தின் பிஞ்சரா கம்பத்தில்இன்று மதியம் தனியார் பேருந்து ஒன்றும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் காரில் இருந்த 10 பேர் உயிரிழந்தனர். விபத்தில் இறந்தவர்களில் சிலர் பெல்லாரி சங்கனக்கல் பகுதியை சேர்ந்தவர்கள். இவர்கள் பெல்லாரி ஊரகத் தொகுதியில் உள்ள சங்கனக்கல்லில் இருந்து மைசூருவுக்கு சுற்றுலா சென்றிருந்தனர். பெல்லாரியைச் சேர்ந்த ஜனார்தன் (45), புனித் (4), சசிகுமார் (24) ஆகிய 3 பேர் காயமடைந்தனர். இதில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.