Skip to content

மயில்சாமி இறுதி ஊர்வலம்…வழிநெடுகிலும் மக்கள் அஞ்சலி

  • by Authour

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான மயில்சாமி, நேற்று அதிகாலை 3.30 அளவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். 57 வயதாகும் மயில்சாமி சிறிய பெரிய வேடங்களில் என சுமார் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கமலின் அபூர்வ சகோதரர்கள், ரஜினியின் பணக்காரன் உள்ளிட்ட எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார். இவரது திடீர் மறைவு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சென்னை சாலிகிராமத்தில் வைக்கப்பட்டுள்ள மயில்சாமியின் உடலுக்கு திரையுலகினர், அரசியல் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இன்று காலை 9.3 மணி அளவில் மயில்சாமியின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினர். பின்னர் மயில்சாமியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

அதைத்தொடர்ந்து மயில்சாமியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலத்தில் எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட சில திரை நட்சத்திரங்கள் பங்கேற்றனர். மயில்சாமி உடலுக்கு சிவ வாத்தியங்கள் முழங்க கலைஞர்கள் இறுதி மரியாதை செலுத்தினர். சாலிகிராமம் வெங்கடேஸ்வரா நகரில் துவங்கிய ஊர்வலத்தில் நடிகர்கள், பொதுமக்கள் கண்ணீர்மல்க பங்கேற்றனர். வழிநெடுகிலும் பொதுமக்கள் திரண்டு நின்று அஞ்சலி செலுத்தினர். வடபழனி மின்மயானத்தில் இறுதி ஊர்வலம் சென்றடைந்த பிறகு மயில்சாமி உடலுக்கு இறுதி சடங்கு செய்யப்பட்டு தகனம் செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!