Skip to content
Home » மயிலாடுதுறை….. வாலிபர் மர்ம சாவு

மயிலாடுதுறை….. வாலிபர் மர்ம சாவு

  • by Senthil

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா குட்டியாண்டியூர்  மீனவ கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் பாவாடை சாமி மகன் சத்யராஜ்(28) திருமணமாகாதவர். 20ம் தேதி காலை முதல் சிலருடன் மது அருந்திவிட்டு மது போதையில் சுற்றி திரிந்துள்ளார். இந்நிலையில் மதியம் கடற்கரையில் சத்யராஜ் காயம் எதுவும் இன்றி மயங்கி கிடந்துள்ளார்.

இதனைக் கண்ட கிராம மக்கள் சத்யராஜை தரங்கம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துள்ளனர்.அங்கு பரிசோதித்த டாக்டர் சத்யராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த பொறையார் போலீசார் சத்யராஜ் உடலை மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்து சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து குட்டியாண்டியூர் மீனவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

உடற்கூறு ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் விசாரணைமேலும் தீவிர மாக் நடத்தப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தரங்கம்பாடி பகுதி மீனவ கிராமத்தில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!