மயிலாடுதுறை அருகே உள்ள பெரிய நாகங்குடியை சேர்ந்தவர் மாயகிருஷ்ணன்(35) , கொத்தனார் . தேவகோட்டையில் உள்ள ராஜா மலேசியால் எஸ்.ட்டி. கார்னர் என்ற சொந்த ஓட்டலுக்கு ஆட்களை விசாவிற்குப் பணம் இல்லாமல் அழைத்துச் செல்கிறார் என்றும் மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளம் தருகிறார் என்று கேள்விப்பட்டு அவரது ஏஜன்ட்டிடம் மாயகிருஷ்ணன் சென்றார்.
ஏஜன்ட் பாலமுருகன் என்பவர் மாயகிருஷ்ணனை மலேசியா செல்வதற்கு கடந்த பிப்ரவரி 20ம் தேதி திருச்சியில் விமான நிலையத்திற்கு அழைத்துள்ளார். மாயகிருஷ்ணனும் அவரது தம்பி ராம்குமாரும் விமானநிலயத்திற்குள் நுழையும்போது ஏஜன்ட் பாலமுருகன் விசாவை அளித்துள்ளார், அதில் சுற்றுலா விசா என்று இருந்ததைக் கேட்டதற்கு, எங்கள் ஓட்டலுக்கு வேலைக்கு அழைத்துச் செல்பவர்களை இப்படித்தான் அழைத்துப் போகிறோம் என்று சமாதானம்கூறியதால் மாயகிருஷ்ணனை மலேசியாவிற்கு அனுப்பிவிட்டு ராம்குமார் வீடுதிரும்பியுள்ளார்
மலேசியா சென்ற மாயகிருஷ்ணன் தனது வீட்டாரிடம் வாரம்தோறும் பேசியுள்ளார், தனக்கு தினந்தோறும் 10 மணி நேர வேலை என்றும் காய்கறி நறுக்குவது, சாப்பாடு பறிமாறுவது என்று ஓய்வில்லாமல் வேலை வாங்குகிறார்கள் ஓய்வெடுக்கவே முடிவதில்லை உடல்நிலை மோசமடைந்துவருகிறது என்றும் கூறியுள்ளார்,
இரண்டு மாத முடிவில் மாயகிருஷ்ணன் சம்பளம் கேட்டதற்கு சம்பளத்தை வங்கிமூலம் உன் வீட்டிற்கு அனுப்பிவிட்டோம் என்று கூறியுள்ளனர். ஆனால் பணம் அனுப்பப்படவேயில்லை, அதன் பிறகு மாயகிருஷ்ணனை தொடர்புகொள்ளவே முடியவில்லை. ஒருநாள் போன்செய்த மாயகிருஷணன், , நான் முதலாளியிடம் சம்பளம்கேட்டதற்கு என்னை அடித்து உதைத்து சித்திரவதை செய்கின்றனர். எனக்கு முடியவில்லை என்னை எப்படியாவது காப்பாற்றி அழைத்துவிடுங்கள் என்று அழுது புலம்பியுள்ளார்.
இதுகுறித்து ஓட்டல் உரிமையாளரிடம் கேட்டதற்கு பதில்இல்லை. திடீரென்று ஒருநாள் ஓர் ஆடியோ மெசேஜ் வந்துள்ளது, அதில் மாயகிருஷ்ணன் உடம்புக்கு முடியாமல் இருப்பதாகவும் ஓட்டலிலிருந்து அவரை துரத்திவிட்டதாகவும், மன நலம்குன்றி அலைந்து திரிவதாகவும் அவனது வீட்டாரிடம் கூறி எப்படியாவது அழைக்கச் சொல்லுங்கள் என்றும் அப்படி இல்லை என்றால் லூசாகி செத்தாலும் செத்துவிடுவான் என்று எச்சரித்த செய்தி மாயகிருஷ்ணனது குடும்பத்தாருக்குக் கிடைத்தது.
உடனடியாக மயிலாடுதுறை மாவட்டஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர், காரைக்குடிக்குச் சென்று மாயகிருஷ்ணனனை வரவழையுங்கள் என்று ஏஜன்ட்டிடம் கேட்டதற்கு தீபாவளிக்குள் அனுப்பி வைப்பார்கள் என கூறினார். ஆனால் இதுவரை வரவில்லை என்பதால் காவல்கண்காணிப்பாளரிடம் மாயகிருஷ்ணன் குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். ஓட்டல் உரிமையாளர் செல்போன் வாட்சப் மூலம் மாயகிருஷ்ணன் பெற்றோரிடம்பேசி, அவனை அனுப்பி வைக்க ரூ.1 லட்சம்பணம் அனுப்பவேண்டும் என்று பேசி போனை துண்டித்துவிட்டார்.
மாயகிருஷ்ணனை அறையிலேயே பூட்டி சிறைவைத்துள்ளனர். தனது மகனை தமிழக அரசு மீட்டுத்தரவேண்டும் என்றும் மாயகிருஷ்ணனை அடித்து உதைத்து நாசப்படுத்திய ஓட்டல் உரிமையாளர் ராஜா மற்றும் ஏஜன்ட் மீது நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட மாயகிருஷ்ணனை மீட்டும் அவரது சம்பளத்தொகை மருத்துவ செலவு, உரிய நட்ட ஈட்டையும் பெற்றுத்தரவேண்டும் என்று அவர்களது பெற்றோர் தமிழக அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளனர்.