மயிலாடுதுறையில் இன்று காலை 10 மணி அளவில் பயங்கர சத்தம் கேட்டது. இதனால் நில அதிர்வு ஏற்பட்டுவிட்டதோ என மக்கள் அச்சமடைந்தனர். அப்போது ஒரு ஜெட் விமானம் தாழ்வாக சென்று கொண்டிருந்தது. அந்த விமானத்தின் சத்தம் தான் அதிகமாக கேட்டதால் மக்கள் அச்சமடைந்து உள்ளனர்.
மயிலாடுதுறை நகரம் மட்டுமல்லாமல், மாவட்டத்தில் பரவலாக இந்த சத்தம் கேட்டுள்ளது. இதுகுறித்து வல்லுனர்களிடம் கேட்டபோது ஜெட் விமானம் தாழ்வாக பறக்கும் போது சில நேரங்களில் காற்றின் அலை காரணமாக அதிக சத்தம் கேட்பது இயல்புதான் என தெரிவித்தனர்.
இது குறித்து காவல்துறையினரிடம் கேட்டபோது இது வழக்கமான சோதனை ஓட்டம் தான். அச்சப்படத் தேவையில்லை என தெரிவித்தனர்.தஞ்சாவூர் விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்ட ஜெட் விமானம் ஆடுதுறை பகுதியில் வேக்கம் ஓபன் (vacuum open) செய்த போது ஏற்பட்ட சத்தம் மயிலாடுதுறை மாவட்டத்தில் எதிரொலித்ததால் அதிக சத்தம் கேட்டதாக தெரியவந்தது.