மயிலாடுதுறை தருமபுரம் குருஞானசம்பந்தர் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறையும், தேசிய பசுமைப்படையும் இணைந்து நடத்திய கண்காட்சி நடைபெற்றது.
இதில், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 55 பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு, காலநிலை மாற்றம், நெகிழி ஒழிப்பு, புவி வெப்பமயமாதல், சுற்றுச்சூழல் மாசுபடுதல், இயற்கை உணவுகளை பயன்படுத்துதல், பாரம்பரிய உணவு முறையை ஊக்குவித்தல் உள்ளிட்ட கருப்பொருள்களில் தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்தினர்.
பங்கேற்ற 55 பள்ளிகளுக்கும் பங்கேற்புத் தொகையாக தலா ரூ.1000 வழங்கப்பட்டது. மேலும், முதல் மூன்று இடங்களைப் பெற்ற பள்ளிகளான தரங்கம்பாடி தூய தெரசா பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதல் பரிசாக ரூ.10,000, சீர்காழி சியாமளா பெண்கள் மேல்நிலைப் பள்ளி இரண்டாம் பரிசாக ரூ.8,000, நீடூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மூன்றாம் இடத்தை ரூ.7,000 ரொக்கப்பரிசு பெற்றன. அதுமட்டுமின்றி, 10 பள்ளிகளுக்கு ஊக்கப்பரிசாக ரூ.1,000 வீதம் ரூ.10,000 வழங்கப்பட்டது.