மயிலாடுதுறை அருகே கழுக்கானிமுட்டத்தை சேர்ந்த தவமணி , அவரது மகள் சுபத்ரா ஆகியோர் வேப்பங்குளம் கருவக்காடு பகுதியில் தொடர்ந்து பல மாதங்களாக கள்ளச்சாராய விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
தவமணி கைது செய்யப்பட்ட நிலையில் அவரது மகள் சுபத்ரா தொடர்ந்து சாரய விற்பனை செய்து வந்தாராம். மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த வேப்பங்குளம்
பகுதி பெண்கள் சாராய விற்பனை நடைபெற்ற இடத்திற்கு சென்று புதுச்சேரி மாநில சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து அப்பகுதியில் உள்ள சாலையில் சாராய பாக்கெட்டுகளை உடைத்து அழித்தனர்.
அதைத்தொடர்ந்து கள்ளச்சாராய விற்பனையை தடுக்காத காவல்துறையை கண்டித்து அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்திலும் பெண்கள் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சாலைமறியல் போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு போலீசார் வராத நிலையில் சாராய விற்பனையில் ஈடுபட்ட பெண் சுபத்ராவை எச்சரிக்கை செய்த பெண்கள் கலைந்து சென்றனர். தங்கள் பகுதியில் பல ஆண்டுகளாக சாராய விற்பனை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டு சாராய விற்பனையை தடுக்க வேண்டும் என்றும் பகுதி பொது மக்களிள் கோரிக்கை விடுத்துள்ளனர்.