மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாd அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலெக்டர் மகாபாரதி, சிறப்பு அலுவலர் கவிதா ராமு ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவு செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட கண்காணிப்புஅலுவலர் கவிதா ராமு. கலெக்டர் மகாபாரதி ஆகியோர் கூறியதாவது:
மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பருவமழையை எதிர்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது . மயிலாடுதுறை மாவட்டத்தில் 69 ஆயிரம் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 15 நாள் பயிர் முதல் 60 நாள் பயிர்களாக இவை உள்ளன. மயிலாடுதுறை மாவட்டத்தில் 20 சென்டிமீட்டர் வரை மழை பெய்தால் 2500 ஹெக்டர் பயிர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அதற்கு மேல் மழை பெய்தாலும் கூட அவற்றை உடனுக்குடன் வடிய வைப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மீனவர்களுக்கு உரிய முன்னெச்சரிக்கைகள் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ள. காவல்துறை தீயணைப்பு துறை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் பருவ மழை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளனர் .
இவ்வாறு அவர்கள் கூறினார்.
.