மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் சரகம் முட்டம் கிராமத்தில் கடந்த 14 ம் தேதி இன்ஜினியரிங் கல்லூரி மாணவன் ஹரிசக்தி(20), மற்றும் ஹரீஷ்(25) கொலை செய்யப்பட்ட வழக்கில், ஏற்கனவே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சாராய வியாபாரிகள் முனுசாமியின் மகன்களான தங்கதுரை, மூவேந்தன் மற்றும் மருமகன் ராஜ்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட னர்.
மேலும் நான்கு பேருக்கு கொலையில் தொடர்பு இருப்பதாகவும், அவர்களையும் கைது செய்ய வேண்டும் அந்த கிராம மக்கள் கடந்த 15 ம் தேதி போராட்டம் நடத்திய போது விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட எஸ்பி ஸ்டாலின் உறுதி அளித்தார்.
தொடர்ந்து நடைபெற்ற புலன் விசாரணையில் முனுசாமி மற்றும் அவரது மனைவி மஞ்சுளா ஆகியோரை பெரம்பூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இவ்வழக்கில் குற்றவாளிகளை தப்பிக்க வைக்க உதவியதாக முட்டம் வடக்கு தெருவை சேர்ந்த கலையரசன் மகன் சஞ்சய் என்ற இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனியையே பெரம்பூர் காவல்நிலையத்தில் உளவுப்பிரிவு காவலராக பணியில் இருந்த காவலர் பிரபாகரன் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.