வங்கதேச இந்துக்கள் இனப்படுகொலை செய்யப்படுவதை கண்டித்து மயிலாடுதுறையில் வங்கதேச இந்து உரிமை மீட்பு குழு சார்பில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்.எஸ்.எஸ் மாவட்ட பிரச்சாரகர் நாராயணன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி, விஷ்வ ஹிந்து பரிஷத், பாஜக உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மயிலாடுதுறை கச்சேரி சாலையில் இருந்து புறப்பட்டு கிட்டப்பா அங்காடி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த டிஎஸ்பி. ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் தடுத்ததால் போலீசார் மற்றும் போர்ட்டக்காரர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.