தமிழகத்தின் 38 வது மாவட்டமாக 28.12.20 ம் தேதி மயிலாடுதுறை அறிவிக்கப்பட்டது. திமுக அரசு பதவி ஏற்று கொண்டதும் புதிய ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு ரூ.114கோடி நிதி ஒதுக்கியது. அதன் கட்டுமான பணிகள் மன்னன்பந்தல் பால்பண்ணை பகுதியில் நடந்து வந்தது.
7 மாடிகளைக் கொண்ட புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகம் கட்டிடம் முழுவதுமாக கட்டி முடிக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் புதிய மாவட்ட ஆட்சியர்
அலுவலக கட்டிடத்தை நேற்று பார்வையிட்டார். மாவட்ட கலெக்டர் மகாபாரதி, எம்பி ராமலிங்கம் , எம்எல்ஏ நிவேதா முருகன் , துறை அதிகாரிகளுடன் கட்டிடத்தை திறப்பதற்கான நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
வரும் மார்ச் 4ம் தேதி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதற்காக விழா ஏற்பாடுகள் சிறப்பாக நடந்து வருகிறது.