இலங்கை முல்லைத்தீவில் இன்று காலை ஒரு நாட்டுப்படகு கரை ஒதுங்கியது. அதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 50 பேர் இருந்தனர். அவர்களில் பலர் சோர்வுடன் மயக்க நிலையில் காணப்பட்டனர். இதை அறிந்த முல்லைத்தீவு மீனவர்கள் வந்து படகில் இருந்தவர்களுக்கு குடிநீர், உணவு வழங்கினர். சிலர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் மியன்மர் நாட்டை சேர்ந்தவர்கள். இவர்கள் ஏன் முல்லைத்தீவு வந்தார்கள் என்பது குறித்து இலங்கை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.