நடிகை பிரியங்கா சோப்ரா 2018 ம் ஆண்டு அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனசை மணந்து தற்போது ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். இந்தி திரையுலகில் தனக்கு பட வாய்ப்பு கிடைக்க விடாமல் ஒரு கும்பல் சதி செய்ததாக புகார் தெரிவித்து இருந்தார்.
நடிகை பிரியங்கா சோப்ரா மிகவும் மனம் திறந்து பேசும் தைரியம் கொண்ட நடிகை. பிரியங்கா அடிக்கடி தனது எண்ணங்களை தயக்கமின்றி பகிரங்கமாக வெளிப்படுத்தி, அதற்காக பாராட்டுகளை பெற்று வருகிறார். இப்போது, ஒரு நிகழ்ச்சியில் பிரியங்கா தனது முன்னாள் காதல் உறவுகள் குறித்து வெளிப்படுத்தியிருப்பது. ஒரு காலத்தில் தான் ஒரு காதலில் இருந்து இன்னொரு காதலுக்கு பயணித்ததாகவும், அப்போது தன் தவறுகளை புரிந்து கொள்ள முடியவில்லை என்றும் பிரியங்கா கூறி உள்ளார்.
இது தொடர்பாக பிரியங்கா கூறியதாவது:- எனது முன்னாள் காதலர்கள் அனைவரும் சிறந்த ஆளுமை கொண்டவர்கள் ஆனால் அந்த காதல்கள் அனைத்தும் தோல்வியடைக் காரணம் கருத்து வேறுபாடுகள் – அல்லது ஒற்றுமையின்மை. ‘உறவுகளுக்கு இடையே நான் நேரம் ஒதுக்கவில்லை. என்னுடன் பணியாற்றிய பல நடிகர்களை காதலித்தேன். உறவு எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி எல்லாம் எனக்கு தெரியும் என்பது என் எண்ணமாக இருந்தது. எனது யோசனைகளுக்கு ஏற்ப உறவுகளை மேம்படுத்த முயற்சித்தேன்.
ஆனால் பல உறவுகள் மிகவும் மோசமாக முடிவடைகின்றன. ஆனால் அவை எதுவும் மோசமானவை என்று சொல்ல முடியாது. அவர்கள் அனைவரும் சிறந்த ஆளுமை கொண்டவர்கள்.மிகவும் அற்புதமானவர்கள். என் கணவர் என் வாழ்க்கையில் வருவதற்கு முன்பே நான் காதல் உறவுகளில் இருந்து விலகி விட்டேன். நான் ஏன் தொடர்ந்து அதே தவறுகளை செய்கிறேன் என்பதை நான் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. எனது வேலை அல்லது மற்ற விஷயங்களை என் துணைக்காக ஒதுக்கி வைப்பதில் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை.
நான் எனக்காக நிற்கவில்லை. ஒரு உறவு முறிந்த பிறகு உடனடியாக அடுத்த உறவில் குதிக்க கூடாது என்பது எனக்கு புரிந்தது. நான் என்னை நானே அழித்துக் கொண்டிருக்கிறேனா என்று யோசித்தேன்.என் குடும்பம் மற்றும் என்னை உண்மையாக நேசிக்கும் நபர்களைத் தவிர எனக்கு வேறு யாரும் இல்லை என்பதை உணர்ந்தேன். காதல் உறவில் நுழையும் போது, எனக்குச் சொந்தமான அனைத்தையும் மறந்து மறைந்து போகும் நிலை இருந்தது. எனது பெரும்பாலான உறவுகளில் நான் கண்ணுக்குத் தெரியாதவளாக மாறிவிட்டேன் இவ்வாறு அவர் கூறி உள்ளார்.