சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களைத் தொடர்ந்து திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களை கனமழை கடுமையாக சீரழித்தது. மக்களின் இயல்பு வாழ்க்கையை குலைத்து, உயிர்ப்பலிகள் நேருமளவுக்கு அங்கே பரிதவிப்பு சூழ்ந்தது. பல கிராமங்கள் தகவல் தொடர்பிலிருந்தே துண்டிக்கப்பட்ட சூழலில், வெள்ள மீட்பு பணிகள் மற்றும் அது தொடர்பான ஆய்வுகளில் தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அதிகாரிகள் புடைசூழ ஈடுபட்டிருந்தனர்.

அவர்களில் மண்ணின் மைந்தரான இயக்குநர் மாரி செல்வராஜும் இடம்பெற்றிருந்தார். தென்மாவட்டங்களின் ஒவ்வொரு கிராமமும் அவருக்கு அத்துப்படி என்பதாலும், தனது பகுதி என்பதாலும் தன்னார்வலர்களில் ஒருவராக பங்கேற்றிருந்தார். மாமன்னன் திரைப்படத்துக்காக மாரி செல்வராஜ் – உதயநிதி இணைந்திருந்ததால், இருவரின் வெள்ள மீட்பு மற்று ஆய்வு பணிகளை எதிர்க்கட்சியினர் வெகுவாக சமூக ஊடகங்களில் சாடி வந்தனர்.