Skip to content
Home » கடல் மட்டம் உயர்வு……..முத்துப்பேட்டை, பிச்சாவரம் அலையாத்தி காடுகள் கடலில் மூழ்கும் ஆபத்து

கடல் மட்டம் உயர்வு……..முத்துப்பேட்டை, பிச்சாவரம் அலையாத்தி காடுகள் கடலில் மூழ்கும் ஆபத்து

  • by Senthil

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் பிச்சாவரம் அலையாத்தி சதுப்பு நில வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதி உலகின் இரண்டாவது பெரிய சதுப்பு நிலக்காடுகள் ஆகும். இந்த வனம் இரண்டு முக்கியமான நதிகளின் முகத்துவாரமான வடக்கில் வெள்ளாறு சரணாலயத்திற்கும், தெற்கில் கொள்ளிட கரை ஓரத்திற்கும் இடையில் அமைந்துள்ளது. சுமார் 3,000 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த சதுப்பு நிலத்தில் இழு படகு, படகு சவாரி போன்ற ஏராளமான நீர் விளையாட்டுகள் சுற்றுலாப் பயணிகளை கவர்கிறது. பல திரைப்படங்களில் இந்த அலையாத்தி காடுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பிச்சாவரம் அலையாத்தி காடுகள் 413 ஹெக்டர் அளவில் உள்ளது.

திருவாரூர் மாவட்டம்  முத்துப்பேட்டை பகுதியிலும்  அலையாத்தி காடுகள்  அமைந்துள்ளன. 2382 ஹெக்டேர்  பரப்பளவில் இது அமையப்பெற்றுள்ளது.   கடல் மட்டம் உயர்வு காரணமாக 2100ம் ஆண்டில் முத்துப்பேட்டை அலையாத்தி காடு மற்றும் பிச்சாவரம் அலையாத்தி காடுகள் காணாமல்போக வாய்ப்புள்ளதாக ஆய்வுகளில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலில் அலையாத்தி காடுகள் மூழ்குவதால் அந்த காட்டுப்பகுதிகளில் இருக்கும் அதிகப்படியான கார்பன்கள் சுற்றுச்சூழலில் கலந்து பாதிப்பை ஏற்படுத்தும். 2.24 டிராகிராம் கார்பன் வெளியாகும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் அங்குள்ள மீன்கள் கடல்சார் உயிரினங்கள் மற்றும் அங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு பெரும் ஆபத்து  ஏற்படும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!