Skip to content
Home » முத்துமாரியம்மன் கோவிலில் 6 கோடி மதிப்பிலான பணம் கொண்டு சிறப்பு அலங்காரம்…

முத்துமாரியம்மன் கோவிலில் 6 கோடி மதிப்பிலான பணம் கொண்டு சிறப்பு அலங்காரம்…

ஒவ்வொரு ஆண்டும் தமிழ் வருடத்தின் முதல் மாதமான சித்திரை மாதத்தில் முதல் நாள் தமிழ் புத்தாண்டாக தமிழர்களால் கொண்டாடபட்டு வருகிறது. இந்நாளில் காலையிலேயே சித்திரை கனியான பழங்களை பார்த்து கண்விழிப்பது என்ற வழக்கத்துடன் துவங்குகிறது. இதேபோல் கோவில்களில் சிறப்பு அலங்காரம், பூஜை செய்து வழிபாடு நடத்தப்படுகிறது. சித்திரை திருநாளான இன்று இதேபோல் கோவை காட்டூர் பகுதியிலுள்ள முத்து மாரியம்மன் திருக்கோவிலில் 83வது சித்திரை திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடபட்டு வருகிறது. இக்கோவிலில் சித்திரை முதல்நாளான இன்று 100,200,500,2000 ரூபாய் நோட்டுக்கள் என

சுமார் ரூ.6கோடி மதிப்பிலான பணத்தை கொண்டும் தங்க, வைர ஆபரணங்களை கொண்டும் சிறப்பு அலங்காரம் செய்யபட்டு சிறப்பு பூஜை செய்யபட்டது. இதனை ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.இதேபோல் கோவையிலுள்ள பல்வேரு கோவில்களிலும் சிறப்பு அலங்காரம், பூஜையுடன் வழிபாடு செய்து தமிழ் புத்தாண்டு கொண்டாடபட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *