Skip to content
Home » பழிக்கு பழியாக திருச்சி ரவுடி வெட்டிக்கொலை… பட்டப்பகலில் பயங்கரம்…

பழிக்கு பழியாக திருச்சி ரவுடி வெட்டிக்கொலை… பட்டப்பகலில் பயங்கரம்…

  • by Authour

திருச்சி அரியமங்கலம் திடீர் நகரை சேர்ந்தவர் பெரியசாமி. அவரது மறைவிக்கு பிறகு இவரது தம்பி கேபிள் சேகர் பன்றி வளர்ப்பு, பைனான்ஸ், கேபிள் போன்ற தொழில்கள் செய்து வந்தார். கேபிள் சேகர் முன் விரோதம் காரணமாக கடந்த 2011- ம் ஆண்டு வீட்டின் அருகே வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கேபிள் சேகரின் அண்ணன் பெரியசாமியின் மனைவி பார்வதி, மகன்கள் தங்கமணி, சிலம்பரசன் மற்றும்
பிரபல ரவுடிகள் பாஸ்கர், ஜெயச்சந்திரன், நாகேந்திரன், அதே பகுதியை சேர்ந்த பரத்குமார், சதாம் உசேன் உள்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த கொலை வழக்கு திருச்சி கோர்ட்டில் நடைபெற்ற வருகிறது.

இரு குடும்பத்தினருக்கும் தொடர்ந்து முன் விரோதம் இருந்து வந்தநிலையில், சம்பவத்தன்று நள்ளிரவு பெரியசாமியின் மகனும், பிரபல ரவுடியுமான சிலம்பரசன்(வயது 35) அவரது வீட்டின் அருகே உள்ள காட்டுப்பகுதியில் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக

அரிமயமங்கலம் போலிசார் வழக்குப்பதிவு  திருச்சி மேலஅம்பிகாபுரம் அண்ணாநகரை சேர்ந்த முத்துகுமார்(28), அதே பகுதியை சேர்ந்த சரவணன்(2
மற்றும் அரியமங்கலத்தை சேர்ந்த காளியம்மன்கோவில் தெருவை சேர்ந்த ஜெகநாதபுரம் ரஞ்சித் (19), அரியமங்கலம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த கோபிநாத் (20) ஆகிய 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் இன்று காலை எஸ்ஐடி பகுதியில் உள்ள டீ கடையில் முத்துகு்மார் டீகுடித்துகொண்டார். அ ப்போது சம்பவ இடத்திற்கு வந்த 2 பேர் முத்துகுமாரை வெட்டிக்கொலை செய்துவிட்டு ஓடிவிட்டனர். சிலம்பரசன் கொலை சம்பவத்திற்கு பழிக்குபழியாக ரவுடி முத்துகுமார், கொலை செய்யபப்ட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். பட்டப்பகலில் தஞ்சை மெயின்ரோட் டில் நடந்த இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *