திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கோவை துடியலுர் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டார். அவரை பிடித்த போலீசார் கோவை இளைஞர் நீதிக்குழுமம், முதன்மை நடுவர், முன்னிலையில் ஆஜர்படுத்தினர். இளைஞரின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர் 15 நாட்கள் தினமும் 8 மணிநேரம் திருச்சி மாநகர போக்குவரத்து காவல்துறைக்கு உதவிபுரிய வேண்டுமென்று முதன்மை நடுவர் உத்தரவிட்டார்.
தக்க அறிவுரையை வழங்கியும் இனிமேல் எந்த ஒரு குற்ற செயல்களிலும் ஈடுபட கூடாது என எச்சரித்தும், இன்று முதல் 15 நாட்களுக்கு, தினமும் 8 மணிநேரம் திருச்சி மாநகர ஸ்ரீரங்கம் போக்குவரத்து ஒழுங்குபிரிவில் போக்குவரத்தினை சீர்செய்திட உதவிபுரியுமாறு இளைஞருக்கு அறிவுரை வழங்கி அனுப்பினார்.
அதனைத் தொடர்ந்து இன்று காலை 9 மணி முதல் ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலை சிக்னல் பகுதியில் ஶ்ரீரங்கம் போக்குவரத்து காவலர்கள் உதவியுடன் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் இளைஞர் ஈடுபட்டார்.
தொடர்ந்து 15 நாட்களுக்கு மாம்பழச் சாலை மற்றும் திருவானைக்காவல் பகுதிகளில் போக்குவரத்து சரி செய்யும் பணியில் அந்தஇளைஞர் ஈடுபடுவார்.