திருச்சி மாவட்டம், முசிறி தொட்டியம் அருகே நாகையாநல்லூர் ஊராட்சி கல்லூர்பட்டி பகவதி அம்மன் தேர் திருவிழாவில் காப்பு கட்டுதல் நடைபெற்று ஏழு நாட்கள் தினமும் பகவதி அம்மனுக்கு பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. பகவதி அம்மன் தேர் ரதம் ஏறும் நிகழ்ச்சி நடை பெற்று திரு வீதி உலா நடைபெற்றது. பகவதி அம்மன் கோவிலில் தொடங்கி பகவதி அம்மன் கோவில் தெரு கல்லூர்பட்டி காட்டுப்புத்தூர் சாலை ஏலூர் பட்டி சாலை எம்.ஜி.ஆர் நகர். கணபதி நகர். உள்ளிட்ட பகுதிகளுக்கு பக்தர்கள் தேரை தோலில் சுமந்து சென்றனர் . இவ்விழாவுக்கான ஏற்பட்டினை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். மேலும் ஏராளமான பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர்.