திருச்சி மாவட்டம், முசிறி நகராட்சியில் தூய்மை பணியாளர்கள் தங்கள் பணிக்கு அவுட்சோர்சிங் முறையை அமல்படுத்தியதை கண்டித்தும் குறைந்தபட்ச கூலி தருவதாகவும் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
முசிறி நகராட்சியில் 25 நிரந்தர தூய்மை பணியாளர்களும், 72 தற்காலிக பணியாளர்களும் பணியாற்றினர். தற்காலிக பணியாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ 630 தினக்கூலியாக வழங்கப்பட்டது. தற்போது இந்தப் பணிகள் அவுட்
சோர்சிங் எனப்படும் ஒப்பந்த அடிப்படையில் தனியாருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் தினக்கூலி பணியாளர்களிடம் இதே கூலி தரப்படும் எனக் கூறிவிட்டு தற்போது ரூ420 கையெழுத்து பெற்று தினமும் ரூ. 400 அடிப்படையில் கூலி கொடுத்ததாக கூறப்படுகிறது. இதை கண்டித்து தூய்மை பணியாளர்கள் சிஐடியு சங்கம் சார்பில் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு முன்பு நகராட்சி வழங்கியது போல் ரூ630 தினக்கூலி வழங்க வேண்டும் எனக்கோரிக்கை வைத்து தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக முசிறியின் பெரும்பாலான இடங்களில் குப்பை அள்ளபடாமல் உள்ளது. முசிறி நகராட்சி முன்பு குப்பை அகற்றப்படாமல் உள்ளது. இதே நிலை நீடித்தால் மக்களுக்கு சுற்றுப்புற சுகாதாரம் பாதித்து மக்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தூய்மை பணியாளர்கள் சுமார் 60 பேர் ஒரு பேருந்தில் திருச்சிக்கு ஆர்ப்பாட்டம் நடத்த சென்றுள்ளனர்.