திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடு அடுத்த பழைய வாணியம்பாடி தேவஸ்தானம் கிராமத்தில் உள்ள 1250 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ பிரஹன் நாயகி சமேத சுயம்பு ஸ்ரீ அதீதிஸ்வரர் ஆயலத்தில் இன்று இசைஞானி இளையராஜா சாமி தரிசனம் செய்தார், முன்னதாக கோவிலுக்கு வந்த இளையராஜாவிற்கு பூரண கும்ப மரியாதை செய்யப்பட்டது, அதனை தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள சரஸ்வதி
சன்னதி, முருகர் சன்னதி மற்றும் தட்ணாமூர்த்தி சன்னத்தில் இளையராஜா சாமி தரிசனம் செய்து, சிறப்பு பிரார்த்தனை செய்தார்.. அதனை தொடர்ந்து இளையராஜா கோவிலுக்கு வந்திருப்பதை அறிந்த கோவிலுக்கு வந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் , அவருடன் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்தனர்..