திருச்சி மாவட்டம் முசிறி அருகே மேட்டுப்பட்டி அண்ணா நெசவாளர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (27). இவர் தச்சு வேலை செய்து வருகிறார். மேட்டுப்பட்டி இ.பி ஆபீஸ் அருகே போக்குவரத்து போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது சுப்பிரமணி மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதால் அபராதம் விதித்தனர். நண்பர்களிடம் பணம் கடன் வாங்கி அபராதம் பத்தாயிரம் ரூபாய் கட்டி விட்டு வாகனத்தை சுப்பிரமணி மீட்டு கொண்டு வந்துள்ளார். பின்னர் இது குறித்து கருத்து தெரிவித்து வாட்ஸப்பில் வீடியோ வெளியிட்ட சுப்பிரமணி மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு முசிறி ஜிஎச்சிற்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர் முதலுதவி பெற்று மேல் சிகிச்சைக்காக திருச்சி ஜிஎச்சில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து முசிறி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.