முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்ட வி முருகன், மற்றும் சிலர் திருச்சி கொட்டப்பட்டில் உள்ள மத்திய சிறை சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் தங்களை இங்கிருந்து அனுப்ப வேண்டும். தங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ வைக்க வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் முகாமில் உள்ள வி . முருகன் தனது கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 28ம் தேதி முதல் சாகும் வரை உண்ணாவிரதத்தை தொடங்கி உள்ளார். இது தொடர்பாக அவர் ஏற்கனவே தமிழக முதல்வர், தலைமை செயலாளர் ஆகியோருக்கு கடிதம் எழுதி உள்ளார். இது போல ராபர்ட் பயாசும் இன்று முதல் சாகும்பரை உண்ணாவிரதம் தொடங்கி உள்ளார்.