திருச்சியில் கடந்த 10.09.12ந்தேதி பொன்மலை காவல்நிலைய எல்லையில் காதல் திருமணம் செய்ய உதவியதை தட்டி கேட்ட நபரை வழிமறித்து அரிவாளால் தாக்கி கொலை முயற்சி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இவ்வழக்கின் புலன் விசாரணையை முடித்து, மேல கல்கண்டார் கோட்டை, கணேஷ் நகர் சேர்ந்த கணேசமூர்த்தி த.பெ.சுப்ரமணி என்பவரை கைது செய்யப்பட்டு, கடந்த 10.09.2012-ந்தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேற்படி வழக்கில் திருச்சி மாவட்ட முதன்மை சார்பு நீதிமன்றம் நீதிபதி முரளிதரன் விசாரணையை முடித்து மேற்படி கணேசமூர்த்தி என்பவருக்கு ச/பி 341 IPC ன்படி 1 மாதம் சிறை தண்டனையும், ச/பி 324 IPC ன்படி 1 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1,000/- அபராதமும், கட்ட தவறினால் மேலும் மூன்று மாத கால சிறை தண்டனையும், ச/பி 307 IPC ன்படி 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10,000/- அபராதமும் கட்ட தவறினால் மேலும் ஒரு வருட கால சிறை தண்டனையும் ஆக (மொத்தம் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.11,000/- அபராதம்) விதித்து ஏககாலத்தில் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி முரளிதரன தீர்ப்பு வழங்கினார். இவ்வழக்கில் அரசு வழக்கறிஞர் கவியரசன் ஆஜரானார்.
இவ்வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்து, குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த பொன்மலை காவல் நிலைய காவல் ஆய்வாளர் தனசேகரன் மற்றும் புலன்விசாரணையில் உறுதுணையாக இருந்த காவல் ஆளிநர்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா வெகுவாக பாரட்டினார்.