கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த பேரிகை அருகே உள்ள பண்ணப்பள்ளி கிராமத்தை சேர்ந்த திம்மராஜ்(26) விவசாய தொழில் மேற்கொண்டு வந்த நிலையில், திம்மராஜ் அதே ஊரை சேர்ந்த திருமலேஷ்(23) என்பவரிடம் 50,000 ரூபாய் பணத்தை கடனாக பெற்றிருந்ததாக தெரிகிறது. கடனை திருப்பி தராத நிலையில் இருவருக்கும் தகராறு இருந்து வந்ததாக சொல்லப்படும் நிலையில் நேற்று முன்தினம் திம்மராஜ்(26), திருமலேஷ்(23), கிஷோர்(19) மற்றும் மணி (19) நண்பர்களான 4 பேர் ஒன்றாக மது அருந்தியபோது மீண்டும் கடன் சம்பந்தமாக வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் திம்மராஜை சக நண்பர்கள் ஆத்திரத்தில் மூன்று பேரும் அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளனர். 3 பேரையும் பேரிகை போலிசார் கைது செய்து விசாரித்ததில் கொலைக்கு பயன்படுத்திய வீச்சருவாள், செய்து கொடுத்த லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த முரளி (19) என்ற வாலிபர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் ஓசூர் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர். பணம் கொடுக்கல் வாங்கல் கொலை செய்த சம்பவத்தில் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது. திம்மராஜ் உடல் கிருஷ்ணகிரி மாவட்ட அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு பிரேத பரிசோதனை முடிக்கப்பட்டு குடும்பத்துடன் ஒப்படைக்கப்பட்டது.