கோவை அவிநாசி சாலையில் உள்ள KMCH மருத்துவமனைக்கு நேற்று வந்த ராஜா என்பவரை, அங்கு பணிபுரியும் செக்கியூரிட்டி மற்றும் நிர்வாகத்தினர் சரமாரியாக தாக்கினர். இதில் அவர் அங்கேே இறந்து விட்டார்.
இச்சம்பவம் தொடர்பாகமருத்துவமனை துணைத் தலைவர் நாராயணன், வர்த்தக பிரிவு மேலாளர் சசிகுமார்,தகவல் தொழில்நுட்ப வல்லுநர் ரமேஷ், மருத்துவமனை நெட்வொர்க் பிரிவு அலுவலர் சரவணன் மற்றும் காவலாளிகள் சரவணகுமார், மணிகண்டன்,சதீஷ்குமார், சுரேஷ் உள்ளிட்ட 8 பேரை பீளமேடு போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களுக்கு போலீசார் முகமூடி அணிவித்து கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று உடல் பரிசோதனை செய்தனர். அதைத்தொடர்ந்து அவர்கள் இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ரமேஷ் வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டனர். கைதான 8 பேைரயும் ஜூன் 12ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.