மயிலாடுதுறை மாவட்டம் தொழுதாலங்குடி விக்கிரமன்குத்தாலம் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன் மகன் திவாகர்(24). இவர் கடந்த 3-ஆம் தேதி இரவு கீழையூர் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் படுகாயத்துடன் உயிருக்குப் போராடியவரை மீட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துமனையில் சிகிச்சைக்காக சேர்த்திருந்தனர். இதற்கிடையே குத்தாலம் போலீசார் வழக்குப் பதிவுசெய்து பெண்ணை கேலிசெய்த தகராலில் தட்டிக் கேட்டபோது திவாகர் படுகாயமடைந்ததாகக்கூறி திவாகரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற அதே பகுதியை சேர்ந்த வசந்தகுமார்(21), கம்பன்(21), 17 வயது சிறுவன் உட்பட 3பேர்மீது கொலை முயற்சி வழக்குப் பதிவுசெய்து சிறையில் அடைத்தனர்.
17ம்தேதி இரவு திவாகர் இறந்துவிட்டதால் இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. திவாகர் உறவினர்கள் இந்த கொலை சம்பவத்தில், 6 நபர்கள் இருந்ததாகவும் மற்ற 3 நபர்களை கைதுசெய்யும்வரை திவாகர் உடலை வாங்கமாட்டோம் என்று கூறி மயிலாடுதுறை கும்பகோணம் சாலையில் குத்தாலம் கடைவீதியில் திவாகரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது, உடனடியாக குத்தாலம் காவல்நிலைய பொறுப்பு ஆய்வாளர் சுகந்தி மற்றும் போலீசார் சென்று அவர்களைக் கைதுசெய்தனர், 27 பெண்கள் உட்பட 54 நபர்கள் தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.