கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே சௌந்தராபுரம் பகுதியில் அரசு மதுபானக்கடையும், அதன் அருகிலேயே மதுபானக்கூடமும் செயல்பட்டு வருகிறது. கடந்த அக்டோபர் 11ஆம் தேதி மதுபான பாரில், மது அருந்துவதற்காக குருமப்பட்டி பகுதியைச் சேர்ந்த சேகர் (48) பூச்சி மருந்து தெளிக்கும் வேலை செய்து வந்துள்ளார், ஹபீப் நகரச் சேர்ந்த லெனின் (31) பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார், செல்லிவலசு பகுதியைச் சேர்ந்த செந்தில்குமரன் (48), தலையாரிப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் (30) ஆகிய 4 நபர்கள் மது அருந்தி கொண்டிருந்தனர்.
அப்பொழுது எதிர்பாராத விதமாக வாய் தகராறு ஏற்பட்டு லெனின் என்பவர் சேகர் என்பவரை பீர் பாட்டிலால் வலது கையில் குத்தியதில், பலத்த ரத்தம் காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அரவக்குறிச்சி போலீசார் மூன்று நபர்களை கைது செய்தனர். இந்த நிலையில் இன்று கொலை செய்த முக்கிய குற்றவாளி லெனின் என்பவருக்கு கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் பெயரில் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் உத்தரவின்படி குண்டாசின் கீழ் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.