தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே பசுபதிகோவில் கிராமத்தைசேர்ந்தவர் சிவமணிகண்டன். மினி பேருந்து ஓட்டுநரான இவர், கடந்த சனிக்கிழமை அய்யம்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே இரு சக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து வந்த 3 பேரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து அய்யம்பேட்டை போலீஸார்
வழக்குப் பதிவு செய்து, டிஎஸ்பி தலைமையில் 5 தனிப் படைகள் அமைக்கப்பட்டு, குற்றவாளிகளை தேடி வந்தனர். குற்றவாளிகளுக்கு இரு சக்கர வாகனம் கொடுத்த சிறுவன் உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
இதனையடுத்து சிவமணிகண்டனை கொலை செய்த 3 பேரை தனிப்படையினர் தொடர்ந்து
தேடிவந்தனர். அய்யம்பேட்டை கிராமத்தை சேர்ந்த சுந்தரேசன், பரமேஸ்வரன், ராகுல் ஆகிய மூன்று பேரும் இன்று ஜெயங்கொண்டம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இவர்கள் மூன்று பேருக்கும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி ராஜசேகர் உத்தரவிட்டார்.