திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் செயலாளராக இருந்த நடேச தமிழார்வன் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் திருவாரூர் அருகே உள்ள பூவானூரை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் முக்கிய குற்றவாளி. அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஜாமீனில் வந்த ராஜ்குமார் இன்று திருவாரூர் கோர்ட்டுக்கு சென்று விட்டு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது கமலாபுரம் என்ற இடத்தில் அவரை சிலர் வழிமறித்து வெட்டினர். இதில் அவர் அந்த இடத்திலேயே இறந்தார். இது குறித்து திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் திருவாரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒன்றிய செயலாளர் கொலைக்கு பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.