பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு நடந்த பாடாலூர் வழக்கின் குற்றவாளியான கார்த்திக் (எ) கார்த்திகேயன்(25) திருவளக்குறிச்சி கிராமம், ஆலத்தூர் வட்டம், பெரம்பலூர் மாவட்டம். என்பவர் நீதிமன்ற பிணையில் சென்றவர், பின் நீதிமன்றத்தில் வழக்கின் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால் கார்த்திகேயன் மீது கடந்த 2022-ம் ஆண்டு பெரம்பலூர் நீதிமன்றத்தால் பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் இருந்து வந்த நிலையில் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ஷ்யாம்ளா தேவி உத்தரவின்படி பெரம்பலூர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் A.பழனிச்சாமி வழிகாட்டுதலின்படி தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளியை தேடி வந்தனர். இதன்படி காவல் ஆய்வாளர் மணிவண்ணன் தலைமையிலான குழுவினர் தலைமறைவாக இருந்த கார்த்திகேயனை கைது செய்து வழக்குப்பதிவு செய்து இன்று 04.01.2024 -ம் தேதி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்து நீதிமன்ற பிடிக்கட்டளையை நிறேவேற்றியுள்ளனர்.
