தமிழக துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் முதன் முறையாக தஞ்சைக்கு வருகை தந்தார். நேற்று இரவு தஞ்சாவூருக்கு வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை கட்சியினர் உற்சாகமாக வரவேற்றனர். பின்னர் இரவு தஞ்சையில் உள்ள சங்கம் ஓட்டலில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தங்கினார்.
தொடர்ந்து இன்று காலை தஞ்சை கலைஞர் அறிவாலயத்தில் முரசொலி செல்வம் படத்தை திறந்து வைத்தார். பின்னர் மணிமண்டபம் அருகே தஞ்சை எம்.பி., அலுவலகத்தை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. பழனிமாணிக்கம், அமைச்சர்கள் கோவி. செழியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, டி.ஆர்.பி. ராஜா, எம்பி முரசொலி, மாநிலங்களவை உறுப்பினர் எஸ். கல்யாணசுந்தரம், தமிழக அரசின் டில்லி மேலிட சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் துரை சந்திரசேகரன், சாக்கோட்டை க. அன்பழகன், கா. அண்ணாதுரை, டி.கே.ஜி. நீலமேகம், என். அசோக்குமார், மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.