மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் மருமகனும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரி செல்வியின் கணவருமான முரசொலி செல்வம் (84) பெங்களூருவில் நேற்று நேற்று காலமானார். அவரது உடல் பெங்களூருவில் இருந்து நேற்று பிற்பகல் சென்னை கொண்டு வரப்பட்டது. கோபாலபுரம் இல்லத்துக்கு கொண்டுவரப்பட்ட முரசொலி செல்வம் உடலைக் கண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்ணீர் விட்டு அழுதார். தொடர்ந்து துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அரசியல் கட்சி பிரமுகர்கள், அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் அஞ்சலி செலுத்தினர். கோபாலபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த முரசொலி செல்வம் உடல் இன்று மாலை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, பெசன்ட் நகர் மின்மயானம் வந்தடைந்தது. அங்கு அவரது உடலுக்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.