முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் நினைவு தினத்தையொட்டி புதுக்கோட்டை மாவட்ட திமுக அலுவலகமான பெரியண்ணன் மாளிகையில் முரசொலிமாறன் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தலைமையில் இந்த நிகழ்ச்சி நடந்தது.
இதில் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன், அவைத்தலைவர் அரு. வீரமணி , பொருளாளர் எம்.லியாகத்தலி, முன்னாள் எம்.எல்.ஏ.கவிதைப்பித்தன். மு.க.ராமகிருஷ்ணன்,செந்தாமரை பாலு,
அ.ரெத்தினம், க.செ.மணிமாறன் , தயாளன், வைத்தூர் செல்வராஜ்
உள்ளிட்ட திமுக வினர் திரளாக கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.